அருகினில் நீ......
பல்லவி
அருகினில் நீ இருக்கையில் ஶ்ரீ ராமா எனக்கு
ஒரு குறையுமில்லை அயோத்தியர் கோமானே
அனுபல்லவி
தரும நெறி காக்க தரணியிலவதரித்த
திருமாலே கேசவனே தீனசரண்யனே
சரணம்
வருந்தித்துதித்திடும் அடியார் நலம் பேணும்
திருவின் நாயகனே தினகர குலத்தோனே
கருமவினைப் பயனால் கட்டுண்ட என்னை
திருவுள்ளமிரங்கி ஆண்டருள வேண்டுமென்
No comments:
Post a Comment