தினமுனைப் பணிந்தேன் ஶ்ரீ ராமா...
பல்லவி
தினமுனைப் பணிந்தேன் ஶ்ரீ ராமா
அனுமனைப் போலவுன்னருகிலிருந்திட
அனுபல்லவி
இனகுலதிலகனே கேசவா
உனது திருவடி நிழலே சதமென
சரணம்
வனவிலங்கென புலன்களெல்லாம்
மனம் போனபடியே செல்லாமல்
கனவிலும் நினைவிலும் உன் திருநாமமே
மனமாரத்துதித்து உனையே நினைந்து
No comments:
Post a Comment