நமோஸ்து நாலீக நிபானனாயை
நமோஸ்து துக்தோததி ஜன்ம பூம்யை|
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை||
தாமரை மலரொத்த முகமுடையவளும், பாற்கடலை பிறந்த இடமாகக் கொண்டவளும், சந்திரன், அமிர்தம் இவற்றின் சகோதரியாகவும் இருக்கிற ஸ்ரீ நாராயணரின் ப்ரியையான லக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.
மாமலர்.......
பல்லவி
மாமலர் கரத்தாளை மகாலக்ஷ்மியை
தூமலர் தூவி மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
தாமரைநாபன் கேசவன் மனங்கவர்
கோமளவல்லியை திருவென்னும் பெயராளை
சரணம்
தாமரை முகத்தாளை தங்க நிறத்தளை
மாமறை போற்றும் பாற்கடல் மகளை
அமுதும் நிலவும் சோதரியாய்க்கொண்டவளை
தாமோதரன் மார்பில் வீற்றிருப்பவளை
No comments:
Post a Comment