உனதருளாலுன்.......
பல்லவி
உனதருளாலுன் திருவடி பணிந்து
மனக்குறைகள் களைந்தேன் ஶ்ரீஜெயராமா
அனுபல்லவி
முனிவரின் யாகங்கள் தடையற நடைபெற
வனம் சென்று அரக்கரை வதம் செய்த கேசவா
சரணம்
தனக்குவமையில்லாத தீனசரண்யனே
இனகுல திலகனே தயரதன் மைந்தனே
அனங்கனைப் படைத்தவனே அழகிய ரகுவரனே
மனிதரும் தேவரும் அனைவரும் வணங்கிடும்
No comments:
Post a Comment