எங்கும் நிறைந்திருக்கும்........
பல்லவி
எங்கும் நிறைந்திருக்கும் ஶ்ரீராமா உந்தன்
பங்கய பதம் பணிந்தேன் சங்கடமிடர் நீங்க
அனுபல்லவி
மங்களம் தந்திடும் திருமகளை மார்பினில்
தங்க வைத்திருக்கும் திருமாலே கேசவனே
சரணம்
சங்கும் சக்கரமும் சாரங்கமுமேந்தி
பொங்கரவணையில் திருக்குடந்தைப் பதியிலும்
மங்காத புகழுடன் வேங்கடமலையிலும்
அரங்கனெனும் பெயருடனே திருவரங்கம் தனிலும்
No comments:
Post a Comment