எல்லாம் நீயே ..... ( சர்வம் விஷ்ணு மயம் ஜகத் )
பல்லவி
எல்லாம் நீயே ஶ்ரீ ராமா நீ
இல்லாத இடமில்லை பொருளில்லை கேசவனே
அனுபல்லவி
பொல்லாத அரக்கரை இல்லாமல் செய்து
நல்லோரைக் காப்பவனே நலமனைத்துமளிப்பவனே
சரணம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உனக்கு
பல்லாண்டு பாடி பாதம் பணிந்தேன்
பல்லாண்டு உந்தன் சங்கும் சக்கரமும்
நல்லவண்ணம் மார்பிலுறை மங்கையும் பல்லாண்டு
No comments:
Post a Comment