எனக்கினி பிறவி வேண்டாம்.......
பல்லவி
எனக்கினி பிறவி வேண்டாம் ராமா உனதருளால்
இனி தவறி பிறந்தாலும் உனைமறவா மனம் வேண்டும்
அனுபல்லவி
அனைத்தும் நீயென்றே நினைத்துனையே வணங்கி
தினமுனையே துதித்தேன் கேசவனே ரகுராமா
சரணம்
மனைவி மக்கள் வீடென்றே வாழ்நாளைக் கழித்தேன்
வினைப்பயனால் கட்டுண்டு உலகில் தினமுழன்றேன்
இனியேனும் உனதருளால் இவையனைத்தும் மாறி
உனது திருவடி அருகிலிருந்திட
No comments:
Post a Comment