சஞ்சலம் களைந்திட.......
பல்லவி
சஞ்சலம் களைந்திட வரமருள்வாய் ராமா
தஞ்சமடைந்தேனுன் மலர்ப் பதமே
அனுபல்லவி
வெஞ்சமரில் அரக்கன் ராவணனை
துஞ்சிடச் செய்த கேசவனே
சரணம்
பிஞ்சிலே அறியாமல் பல பிழைபுரிந்தேன்
நஞ்சென்றும் அமுதென்றுமறியாதிருந்தேன்
பஞ்சவர் நேசனே கஞ்சனைக் காய்ந்தவனே
நெஞ்சார வருந்தி உன்னைத்துதித்தேன்
No comments:
Post a Comment