உன்னையே நினைந்துருகும்....
பல்லவி
உன்னையே நினைந்துருகும் என்னைக் காத்தருள
இன்னும் என்ன தயக்கம் ஓ ரகு ராமா
அனுபல்லவி
அன்னை ஜானகியின் கரம் பிடித்த கேசவனே
தென்னிலங்கை சென்று ராவணனை வென்றவனே
சரணம்
பன்னக சயனனே பாற்கடல் வாசனே
உன்னருள் இல்லையேல் என்னுயிர் வாழுமோ
சின்னஞ்சிறியேன் செய்த பிழை பொறுத்து
மன்னித்தருள்வாயே மாதயாநிதியே
No comments:
Post a Comment