மன இருள் நீங்கிட........
பல்லவி
மன இருள் நீங்கிட தினமுனைத்துதித்தேன்
இனகுலதிலகனே ஶ்ரீ ரகுராமா
அனுபல்லவி
அனைத்தும் நீயே அழகனே கேசவா
வனமாலை கௌத்துபம் துளபமணிந்தவனே
சரணம்
சனகாதி முனிவரும் தேவருமிந்திரனும்
அனுமனும் கருடனும் அனந்தனும் வணங்கிடும்
தினகர குலத்தோனே தீனசரண்யனே
வினைப்பயன் களைந்தெனைக் காத்தருள்வாயே
No comments:
Post a Comment