உனது திருவடியே.........
பல்லவி
உனது திருவடியே சரண அடைந்ததேன்
ஜனகனின் மருமகனே எனைக் காத்தருள்வாய்
அனுபல்லவி
வனம் சென்று தந்தை சொல் காத்த கேசவனே
வினதையின் மகனை வாகனமாய் கொண்டவனே
சரணம்
அனங்கனை மிஞ்சும் பேரழகுடையவனே
சினமில்லாத புன்னகை முகத்தினனே
அனந்தனை இளையவனாய் ஏற்ற ராகவனே
தனம் குலம் கல்வி அனைத்தையுமளிப்பவனே
No comments:
Post a Comment