என்ன ருசி என்ன சுவை ஓ ஶ்ரீ ராமா
பல்லவி
என்ன ருசி என்ன சுவை ஓ ஶ்ரீ ராமா
உன் நாமம் என் நாவில் உரைத்தாலும் போதும்
அனுபல்லவி
கன்னலும் தேனும் பாயசமும் சர்க்கரையும்
ஒன்றாகச் சேர்ந்து நன்றாகச் சுவைத்தது போல்
சரணம்
மன்னுபுகழ் கோசலையின் தலைமகனே கேசவனே
முன்னம் ராவணனின் தலை கொய்த ராகவனே
புன்னகை எப்போதும் மாறாத பேரழகே
உன்னைச் சரணடைந்த பக்தர்களைக்காப்பவனே
No comments:
Post a Comment