பொற்பதம் பணிந்தேன்.....
பல்லவி
பொற்பதம் பணிந்தேன் ஶ்ரீ ரகுராமா
அற்பனெனக்கருள இதுவே தருணம்
அனுபல்லவி
பற்பல அவதாரம் எடுத்த கேசவனே
கற்பனைக்கெட்டாத பேரழகுடையவனே
சரணம்
விற்கலை வேந்தனே கோதண்டராமனே
தற்பரன் சிவனை தினம் துதிப்பவனே
முற்பிறப்பில் செய்த வினைப்பயன் நீங்கி
நற்கதி பெறவே உனைச் சரணடைந்து
No comments:
Post a Comment