ஓ ராமா ஶ்ரீராமா...
பல்லவி
ஓ ராமா ஶ்ரீ ராமா கோதண்ட ராமா
வாராயென் குறை தீர்க்க வந்தெனக்கருள்வாய்
அனுபல்லவி
பாராயணம் செய்து பாடித்துதித்தேன்
ஓராயிரம் நாமம் ஓதித் துதித்தேன்
சரணம்
நாராயணனும் நீ கேசவனும் நீயே
பாரோர் பணிந்தேத்தும் ஆராவமுதனும் நீ
தீரா வினை தீர்க்கும் திருமலை வாசனும் நீ
சீர்மல்கும் திருவரங்கநாதனும் நீயே
No comments:
Post a Comment