வினதையின் புதல்வனை.......
பல்லவி
வினதையின் புதல்வனை வாகனமாய்க் கொண்ட
இனகுல திலகன் கேசவனைப் பணிந்தேன்
அனுபல்லவி
ஜனகனின் மகளைக் கரம் பிடித்த ராமனை
அனங்கனையும் மிஞ்சும் பேரழகுடையவனை
சரணம்
வனமாலை துளபம் கௌத்துபமணிந்தவனை
ஜனனமரண பயம் களைந்திடச் செய்பவனை
இனம் மதம் மொழி யெனும் வேற்றுமை களைந்து
தினமவன் திருநாமம் தனையே துதித்து
No comments:
Post a Comment