எதுவுமியங்குமோ........
பல்லவி
எதுவுமியங்குமோ உனதருளின்றி
புதுப் பொலிவுடனே காட்சி தரும் ஶ்ரீராமா
அனுபல்லவி
சதுர்மறையும் இதிகாச புராணங்களும்
மதித்து போற்றும் மதுசூதனனே
சரணம்
மதுகைடபரின் விதி முடித்தவனே
எதிரிக்குமருளும் கேசவா மாதவா
மிதிலையின் மகளை மணம் புரிந்தவனே
கதி நீயேயென்று உனைச்சரணடைந்தேன்
No comments:
Post a Comment