ஒரு சொல் ஒரு பாணம்..........
பல்லவி
ஒரு சொல் ஒரு பாணம் ஒரு பத்னியென்று
பெருமையுடன் வாழ்ந்தவனே ஶ்ரீ ரகு ராமா
அனுபல்லவி
தரும நெறி வழுவாது ஆட்சி செய்த கேசவனே
குருவருளும் திருவருளும் குறைவின்றிப்பெற்றவனே
சரணம்
அருமறைகள் போற்றும் திருப்பாற்கடல்வாசா
திருமகளைத் தன் மார்பில் வைத்திருக்கும் திருமாலே
கருமவினைப் பயனால் கட்டுண்ட என்னை
திருவுளமிரங்கி காத்தருள வேண்டினேன்
No comments:
Post a Comment