நிகருனக்காருளார்...
பல்லவி
நிகருனக்காருளார் ஶ்ரீ ரகு ராமா
ஜகம்புகழும் அன்னை கோசலை மைந்தனே
அனுபல்லவி
இகபரமிரண்டிலும் சுகமளிப்பவனே
பகலவன் ஒளியையும் மிஞ்சும் தேசுடையவனே
சரணம்
முகமதி அழகுடன் திகழும் கேசவனே
ககனமும் புவனமும் போற்றும் ராகவனே
புகலென உனையே சரணடைந்தேனே
சகலமும் நீயே பன்னக சயனனே
No comments:
Post a Comment