ஓ ரகு ராமா........
பல்லவி
ஓ ரகுராமா விரைந்தெனைக் காத்தருள்
பாரினில் உனையன்றி எனக்கென யாருளார்
அனுபல்லவி
பூரண நிலவின் அழகையும் மிஞ்சும்
பேரழகுடையவனே மாதவா கேசவா
சரணம்
மாரனின் அழகும் உனக்கிணையாகுமோ
தாரணி போற்றும் தாமரை நாபனே
மார்பினில் திருமகளை வைத்திருப்பவனே
வீரராகவனாய் திருவள்ளூர் தலத்துறையும்
No comments:
Post a Comment