செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
அடியார் மனங்களில்....
பல்லவி
அடியார் மனங்களில் வீற்றிருப்பவனே
நெடியோனே ஶ்ரீ ராமா திருவடி பணிந்தேன்
அனுபல்லவி
முடியாத செயலென்று உனக்கெதுவுமில்லை
கொடிய வினைகளையும் தீர்த்தருளும் கேசவனே
சரணம்
இடியெனத் தாக்கி அரக்கரை வதம் செய்த
நெடுமாலே ரகுராமா உன் கோயில் வாசலிலே
படித்தோரும் பாமரருமனைவரும் கடந்து வரும்
படியாகக் கிடந்தேனுமுனைக் காணும் வரமருள்வாய்
No comments:
Post a Comment