சரணகமலங்களை......
பல்லவி
சரணகமலங்களைச் சரணடைந்தேன் ராமா
அரவணைத்தெனையே ஆண்டருள்வாய்
அனுபல்லவி
மரணம் பிறப்பெனும் மாயச்சுழல் நீங்கி
பரகதியடைந்திட வேண்டியே உந்தன்
சரணம்
கரன்முரனரக்ரை அழித்த கேசவனே
மரவுரி தரித்து கானகம் சென்றவனே
நரர்சுரர் முனிவர்கள் சுரபதி மற்றும்
பிரமனும் பணிந்திடும் ராகவனே
No comments:
Post a Comment