வாரணமுகன்
பல்லவி
சரணடைந்தேனுனையே காத்தருள்வாய்
தருணமிதுவே வாரண முகனே
அனுபல்லவி
மரண ஜனன சுழலினைக் கடந்திடவும்
விரைந்து பரகதி அடைந்துனைச் சேரவும்
சரணம்
நரர்சுரரும் நான்முகனும் நந்தியும் கணங்களும்
சுரபதியும் முனிவரும் தினம் பணிந்தேத்தும்
கரங்களில் மோதகமும் பாசாங்குசமுமேந்தும்
பரமசிவன் மகனே கேசவன் மருகனே