என்னை....
பல்லவி
என்னை ஏய்ப்பதில் ஆனந்தமேனோ
இன்னமுதே ராமா ஏனிந்தப் பாராமுகம்
அனுபல்லவி
உன்னைத் தானே தினமும் பாடித்துதித்தேன்
சென்ன கேசவா பதில் நீயே சொல்
சரணம்
உன் நாமமொன்றே நாளுமுரைக்கின்றேன்
உன் நினைவாகவே எப்போதுமலைகின்றேன்
என்ன நான் செய்வேன் எவரிடம் முறையிடுவேன்
அன்னை ஜானகியே நீ அவனிடம் எடுத்துரைப்பாய்
No comments:
Post a Comment