மெத்தனமேன்......
பல்லவி
மெத்தனமேன் ஶ்ரீ ராமா இத்தனை தாமதமேன்
நித்தமுமுனைப் பணியும் பக்தனெனைக் காக்க
அனுபல்லவி
உத்தமனே உனயன்றி வேறோர் தெய்வமில்லை
சித்தத்தில் கேசவனே உன் நாமமே துதித்தேன்
சரணம்
நித்திலத்தொத்தென அடியார்கள் போற்றும்
வித்தகனே நல் முத்தே வீர ராகவனே
இத்தரை மாந்தர்கள் நெறியுடன் வழ்ந்திட
சத்திய மூர்த்தியாய் அவதரித்த ரகுராமா
நற்றவ முனிவரும் தேவரும் போற்றும்
சத்திரிய குலத்துதித்த அயோத்தி மன்னனே
உத்தமி சீதையின் கரம் பிடித்தவனே
அத்தன் சிவனை வணங்கிய சிவராமனே
No comments:
Post a Comment