சங்கரி........
பல்லவி
சங்கரி திங்கள் பிறையணி உமையே
மங்களம் தந்தருள் கேசவன் சோதரி
அனுபல்லவி
பங்கய மலரமர் பிரமனும் வணங்கிடும்
அங்கயற்கண்ணி அகிலாண்டேச்வரி
சரணம்
சங்கடம் களந்திடும் சாம்பவி கல்யாணி
அங்கமில் மன்மதனை எரித்த சங்கரன்
கங்காதரன் ஜம்புகேச்வரன் துணைவி
பொங்கரவணிந்தவளே சாதோதரி கௌரி
சிங்கவாகனம் தனிலமர்ந்து பவனி வரும்
பவானி சூலினி உமா மகேச்வரி
அன்ன நடையழகி சங்குக் கழுத்தழகி
அன்னபூரணி திரிபுரசுந்தரி
சாமகானம்தனில் மனம் மயங்கிடும்
காமேச்வரி கருணாகரி சூலினி
பூமண்டலம் போற்றும் ஶ்ரீ புவனேச்வரி
தாமதமின்றியே எனைக் காத்தருள்வாய்
No comments:
Post a Comment