ஶ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் கீர்த்தனம்...மநோஹரீ ராகம் ஆதி தாளம்
கஞ்ஜ தளாயதாக்ஷி காமாக்ஷி கமலாமநோஹரி த்ரிபுர ஸுந்தரி|குஞ்ஜர கமநே மணிமண்டித மஞ்ஜுல சரணே மாமவ ஸிவபஞ்ஜரஸுகி பங்கஜ முகி குருகுஹ ரஞ்ஜநி துரித பஞ்ஜிநி நிரஞ்ஜிநி ராகா ஸஸிவதநே ஸுரதநே| ரக்ஷித மதனே ரத்னஸதனே ஶ்ரீ காஞ்சன வஸநே ஸுரஸநே|ஸ்ருங்காராஸ்ரய மந்த ஹஸநே ஏகாநேகாக்ஷரி புவனேஸ்வரி ஏகாநந்தா (அ) ம்ருத ஜ்ஜரி பாஸ்வரி ஏகாக்ரமநோலயகரி ஶ்ரீகரி|
ஏககாம்ரேஸ க்ருஹேஸ்வரி ஸங்கரி|
தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களை உடையவளே காமாக்ஷி விருப்பத்தை நிறைவேற்றும் கண்களையுடையவளே ஶ்ரீ மஹாலக்ஷ்மிக்கு ப்ரியமானவளே மூவுலகிலும் அழகானவளே யானை போன்ற கம்பீர நடையழகுள்ளவளே ரத்ன ஆபரணத்தால் அலங்கரிக்கப்பட்ட அழகான பாதங்களை உடையவளே என்னைக் காப்பாற்றுங்கள். சிவன் என்னும் கூட்டுக்குள் கிளியாக பிரகாசிப்பவளே தாமரை போல் முகமுள்ளவளே குருகுஹனுக்கு பிடித்தமானவளே பாபங்களைப் போக்குபவளே பற்றற்றவளே பொளர்ணமி சந்திரனைப்போல் முகமுள்ளவளே அழகான பல்வரிசையை உடையவளே மன்மதனைக் காத்தவளே சிந்தாமணி கிருஹத்தில் வீற்றிருப்பவளே அழகான தங்கத்தாலான வஸ்த்ரம் தரித்தவளே அழகான வாக்குள்ளவளே ஸ்ருங்காரம் குடிகொண்ட புன்சிரிப்புடையவளே ஓரெழுத்து மந்திரம் முதல் பல எழுத்து மந்திரம் வரையுள்ள அனைத்து மந்திர ஸ்வரூபமே புவனேஸ்வரி உலகத்தலைவியே ப்ருஹ்மானந்தம் என்னும் ஆனந்தத்தை அருவி போல் பொழிபவளே பிரகாச வடிவானவளே மனதை ஒருமுகப்படுத்த அருளுபவளே செல்வத்தை அருளுபவளே ஏகாம்பரநாதரின் குடும்பத்தலைவியே சங்கரியே என்னைக் காப்பாற்றுங்கள்
காமாக்ஷி தேவி......
பல்லவி
காமாக்ஷி தேவி உனையே பணிந்தேன்
தாமரை இதழ்போல் கண்ணுடையவளே
அனுபல்லவி
நாமகள் தோழியே கேசவன் சோதரியே
மூவுலகும் போற்றும் பேரழகுடையவளே
சரணம்
காமனும் மயங்கும் புன்சிரிப்புடையவளே
காமேச்வரன் கூட்டில் கிளியாயிருப்பவளே
பூரண நிலவு போல் முகமுடையவளே
வாரணம் போல் மிடுக்கு நடையுடையவளே
ஏகமனேகமெனும் மந்திரப் பொருளானவளே
புவனச்வரியே அகில லோக நாயகியே
பொன்னாடையணிந்தவளே காமனைக் காத்தவளே
சிந்தாமணியெனும் வீட்டில் வசிப்பவளே
ஆனந்த அருவியே அருள் வடிவானவளே
நிலைத்த நிதி தரும் நித்யானந்தமே
ஏகாம்ப்ரேச்வரர் நாயகியே உமையே
திரிபுரசுந்தரியே கமலாமனோகரி
No comments:
Post a Comment