ராகம் - தோடி தாளம் - ரூபகம்
பல்லவி
கமலாம்பிகே அம்ப ஆஸ்ரித கல்ப லதிகே சண்டிகே
ஜகதம்பிகே கம நீயா ருணாம் ஸுகே
கர வித்ருத ஸுகே மாமவ ......கமலாம்பிகே
அனுபல்லவி
கமலாஸநாதி பூஜித கமலபதே பஹு வரதே
கமலாலய தீர்த்த வைபவே ஸிவே கருணார்ணவே (கமலாம்பிகே)
சரணம்
ஸகல லோக நாயிகே சங்கீத ரசிகே
ஸுக வித்வ ப்ரதாயிகே ஸுந்தரி கதமாயிகே
விகளேபர முக்திதாந நிபுணே அகஹரணே
வியதாதி பூத கிரணே விநோத சரணே அருணே
மத்யமம்
ஸகளே குருகுஹ சரணே ஸதாஸிவாந்த: கரணே
அ க ச ட த பாதி வர்ணே அகண்டைகரசபூர்ணே (கமலாம்பிகே)
திருவாரூரில் புகழுடன் விளங்கும் கமலாம்பிகையே உன்னை அநந்யமாய் சரணடைந்தவர்களுக்கு கற்பகக் கொடியே!, சண்டிகாதேவியே! , திருக்கரத்தில் கிளியை ஏந்தி எழில் மிளிரும் சிகப்பு பட்டுச்சேலை உடுத்தி அழகாகவிளங்குபவளே, அகில உலகத்திற்கும் அன்னையே! என்னை காத்தருள்வாயாக.
தாமரையில் தோன்றிய பிரம்மா முதலியவர்களால் பூஜிக்கும் தாமரைத் திருவடிகளை உடையவளே, பக்தர்களுக்குவிரும்பிய வரங்களை அருள்பவளே, கமலாலயம் என்ற குளத்துக்கு சிறப்புச் சேர்ப்பவளே, சிவமாகும் மங்கல வடிவினளே, கருணைக் கடலே! கமலாம்பிகையே என்னை காத்தருள்வாயாக.
சகல உலகங்களுக்கு நாயகியே, இசையை விரும்பி ரசிப்பவளே, கவித்துவ ஞானத்தை நல்குபவளே, அழகியவளே, மாயையிலிருந்து விடுபட்டு இருப்பவளே, விதேக முக்தி அருளும் வல்லபம் உள்ளவளே! முப்பிறப்பிலும் செய்தபாவங்களை போக்குபவளே, பஞ்சபூதங்களுக்கும் சக்தியை அளிப்பவளே, ஒளி பொருந்தியவளே, விதவிதமாகஆசனங்களை போட்டு கொலு வீற்றிருக்கும் போது விநோதமான திருவடிகளின் நிலைகளினால் அழகிய தோற்றம் தரும்பாதார விந்தங்களை உடையவளே, இளம் சிவப்பு வர்ணமுடையவளே
அனைத்துக் கலைகளுக்கும் உறைவிடமானவளே, குருவாய் வந்த முருகனின் அன்னையே, என்றும் சதாசிவனின்உள்ளத்துள் உறைபவளே, அகார க்ஷகார முதலிய மாத்ருகா வர்ண சொரூபிணியே! ஒப்பற்ற ஆனந்தத்தின் பூரண வடிவாய்விளங்குபவளே, திருவாருரில் ஒளிர்பவளான கமலாம்பிகையே என்னைக் காத்தருள்வாய்.
காமகலா வடிவமாக விளங்கும் கமலாம்பிகையின் நிர்குண ஸ்வரூபம், சகுண நிராகாரம் முதலிய வடிவங்கள் இக்கீர்த்தனையில் விமர்சிக்கப்பட்டுள்ளன.
கமலாம்பிகையே.....
கமலாம்பிகையே கற்பக தருவே
கமல பதம் பணிந்தேன் காத்தருள்வாயே
கமல மலர்க்கரத்தில் கிளிதனையேந்தும்
உமையே சண்டியே செவ்வாடையணிந்தவளே
கமலாசனன் பணியும் கமலபதமுடையவளே
கமலாலய தீர்த்தம்தனை சிறப்புறச் செய்பவளே
அகிலலோக நாயகியே சங்கீத ரசிகையே
மாயையகற்றும் மாயையே சுந்தரியே
கவிநயம் தருபவளே பழவினை களைபவளே
பஞ்ச பூதங்களின் சக்தியாயிருப்பவளே
குருகுகன் அன்னையே சிவ வடிவானவளே
அருமறைப் பொருளே திருவாரூர் வளர்
No comments:
Post a Comment