அடி பணிபவர்.....
பல்லவி
அடி பணிபவர் நெடிதுயர்ந்திட அருள்புரிபவளே
கொடியிடையாளுன் பதமே சதமெனப் பணிந்தேன்
அனுபல்லவி
நெடியோன் திருமார்பன் கேசவனின் சோதரியே
அடிமுடி காணவொண்ணா மாசிலாமணி நாயகியே
சரணம்
முடிவும் முதலுமிலா முன்னைப் பழம் பொருளே
கொடிய பவவினைப் பயன்களைப் போக்கிடும்
வடிவுடையாளே மூவருக்கும் மூத்தவளே
வடமுல்லை வாயிலில் கோயில் கொண்டிருப்பவளே
No comments:
Post a Comment