Friday, 21 May 2021

மகாதேவியை.......

 அம்பிகை அமுதக்கடலின் நடுவேயுள்ள நவமணித் தீவில், வசிக்கிறாள். அந்தத் தீவின் மத்தியில் சூரிய மண்டலத்தின் பிரகாசத்துக்கு நிகரான சிவந்த ஒளியுடன் திகழ்கிறது மணி மண்டபம் ஒன்று. அதில் சதாசிவ பீடத்தின் மீது மலர்ந்திருக்கும் தாமரையில் கெளரி தேவி வீற்றிருக்கிறாள். அவளுக்கு இருபுறமும் பிள்ளையாரும் முருகனும் அமர்ந்துள்ளனர். சந்திரனைப் போன்ற வெண்ணிறம் கொண்ட கௌரி தேவி செம்பட்டாடை அணிந்து, நவரத்தினங்கள் இழைத்த பொன் ஆபரணங்களைப் பூண்டவளாக ஜொலிக்கிறாள். அவள் தன் கருணை விழியால் அன்பர்களுக்கு வேண்டி யதை விரும்பியவாறு அளிக்கிறாள்’

கௌரி காயத்ரி மந்திரங்கள்

ஓம் ஸூபதாயை வித்மஹே காம மாலின்யை தீமஹி
தன்னோ கௌரீ ப்ரசோதயாத்:



கருத்து: சுபத்தைத் தருபவளும், ஆசைகளை நிறைவேற்றுபவளுமான மகாகௌரி தேவியை தியானிக்கிறேன். 

ஓம் மகாதேவ்யைச வித்மஹே ருத்ர பத்நியை ச தீமஹி!
தன்னோ கௌரீ ப்ரசோதயாத்.


கருத்து: மகாதேவியாக இருப்பவளும் மகாருத்திர மூர்த்தியின் மனைவியாய் இருப்பவளுமான கௌரிதேவியை தியானிக்கிறேன்.

ஓம் சுவேத வர்ணாய வித்மஹே ம்ருக டங்காய தீமஹி!
தன்னோ கௌரீ ப்ரசோதயாத்.


கருத்து: வெண்மையான வண்ணம் கொண்டவளும், மான், மழு ஏந்தியவளுமான கௌரிதேவியை தியானிக்கிறேன்.


                                    மகாதேவியை.......


                                                     பல்லவி


                                         மகாதேவியை மகாகௌரியை

                                         மகாதேவனின் துணைவியைத் துதித்தேன்


                                                    அனுபல்லவி


                                         மகாவிஷ்ணுவெனும் கேசவன் சோதரியை

                                         மான் மழுவேந்திய வெண்ணிறத்தாளை

  

                                                         சரணம்


                                         அமுதக்கடல் நடுவே நவமணித்தீவிலுறை

                                         கதிரொளிக்கிணையான ஒளிதிகழ் மண்டபத்தில்

                                         சதாசிவபீடமெனும் தாமரைதனிலமர்ந்து

                                         முருகன் கணபதி இருபுறமிருக்கும்


                                         திங்களின் ஒளியை மிஞ்சுமொளியுடையவளை

                                         நவரத்தினம் பதித்த பொன்னகையணிந்தவளை

                                         அங்கமில் மதனும் மயங்கும் வடிவுடையவளை

                                         அருள் தரும் கருணை விழியுடையாளை


                                         

        

                                         


No comments:

Post a Comment