ரக்தஜ்வால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம் |
டக்கா சூல கபால பாசகதரம்ரக்ஷாகராம் பைரவம் ||
நிர்வாணம் ஸுநவாஹனம்
த்ரிநயனஜ் சாநந்த கோலாஹலம்
வந்தே பூதபிசாச நாதவடுகம்
க்ஷேத்ரஸ்ய பாலம் சுபம் ||
கருத்து: சிவந்த ஜுவாலைகளைக் கொண்ட சடையை தரித்திருப்பவரும், சந்திரனை முடியில் தரித்திருப்பவரும், சிவந்த மேனியராகத் திகழ்பவரும், ஒளிமயமாக விளங்குபவரும், உடுக்கை சூலம், கபாலம், பாசக்கயிறு ஆகியவற்றை வைத்திருப்பவரும், உலகத்தை காப்பவரும், பாவிகளுக்கு பயங்கரமான தோற்றத்தைக் காட்டுபவரும், நிர்வாணமாக இருப்பவரும், நாயை வாகனமாகக் கொண்டவரும், மூன்று கண்களைக் கொண்டவரும், எப்போதும் ஆனந்தத்தினால் மிகுந்த கோலாகலம் கொண்டவரும், பூத கணங்கள் பிசாசுக் கூட்டங்கள் ஆகியவற்றுக்கு தலைவனாக இருப்பவரும், க்ஷேத்திர பாலகருமான பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.
காலபைரவனின்....
பல்லவி
காலபைரவனின் கழலடி பணிந்தேன்
சீலமுடன்அனைவரும் வாழ்ந்திட வேண்டியே
அனுபல்லவி
கால காலன் ஆலமுண்ட நீலகண்டன்
கோலாகலமாக நிர்வாண நடம் புரியும்
சரணம்
மாலன் கேசவனும் பிரமனும் பணிந்தேத்தும்
சூலபணியவன் செஞ்சடாதரனவன்
காலனையும் கலங்க வைக்கும் சந்திரசேகரன்
நாலுகால் நாயை வாகனமாய்க் கொண்டவன்
உடுக்கை பாசம் கபாலமேந்திய
கரங்களையுடைய கபாலீச்வரன்
க்ஷேத்திரபாலகன் முக்கண்ணுடையவன்
பூதகணங்களின் தானைத்தலைவன்
No comments:
Post a Comment