பிள்ளையார் பெயர்கள்
🌹🌿50 பிள்ளையார்களின் நீண்ட பட்டியல்:–🌿🌹
🌹 🌿 இதோ தமிழ் நாட்டின் பிள்ளையார் கோவில்களின் (சந்நிதிகளின்) நீண்ட பட்டியல்:–
🌹 🌿 முக்குறுணி விநாயகர் — மதுரை மீனாட்சி கோவில்
விபூதிப் பிள்ளையார் – மதுரை மீனாட்சி கோவில்
நேரு ஆலால சுந்தர விநாயகர் – மதுரை
குடைவரைப் பிள்ளையார் — திருப்பறங்குன்றம் கோவில்
கரும்பாயிரம் பிள்ளையார் – கும்பகோணம்
அழகிய விநாயகர் – திருவாவடுதுறை
ஆண்ட பிள்ளையார் – நறையூர் சித்தீச்சுரம்
ஆதி விநாயகன் – திருவையாறு
ஆழத்துப்பிள்ளையார் – திருமுதுகுன்றம்
உச்சிப் பிள்ளையார் – திருச்சிராப்பள்ளி
ஓலமிட்ட பிள்ளையார் – திருவையாறு
கங்கைக் கணபதி – குடந்தை கீழ்க்கோட்டம்
கடுக்காய்ப் பிள்ளையார் – திருக்காறாயில்
கருக்கடி விநாயகர் – திருக்கச்சூர்
கள்ள வாரணப் பிள்ளையார் – திருக்கடவூர்
கற்பகப் பிள்ளையார் – கடிக்குளம், திருக்காவூர்
கற்பக விநாயகர்– பிள்ளையார்பட்டி
கூப்பிடு பிள்ளையார் – திருமுருகன் பூண்டி
கைகாட்டு பிள்ளையார் – திரு நாட்டியத்தான்குடி
கோடி விநாயகர் – கொட்டையுர்
சிந்தாமணி கணபதி-திருமறைக்காடு
சுந்தர கணபதி- கீழ்வேளூர், திருமழபாடி
சூதவனப் பிள்ளையார்- திருவுச்சாத்தனம்
செவிசாய்த்த விநாயகர் – அன்பிலாந்துறை
சொர்ண விநாயகர் – திருநள்ளாறு
தாலமூல விநாயகர் – திருக்கச்சூர்
துணையிருந்த பிள்ளையார் – திருப்பனையூர்
நாகாபரண விநாயகர் – நாகைக் காரோணம்
நீர்த்தன விநாயகர் – இன்னம்பர்
படிக்காசு விநாயகர் – திருவீழிமிழலை
மணக்குள விநாயகர் – பாண்டிச்சேரி
மாணிக்க விநாயகர் திருச்சி
நவசக்தி விநாயகர் – மைலாப்பூர், சென்னை
அஸ்வத்த விருட்ச விநாயகர் – தி.நகர், சென்னை
படித்துறை விநாயகர் – திருவிடை மருதூர்
பிரளயங்காத்த பிள்ளையார் -திருப்புறம்பியம்
பொய்யா விநாயகர் – திருமாகறல்
பொல்லாப் பிள்ளையார் – திருநாரையூர்
மாவடிப் பிள்ளையார் – நாகைக் காரோணம்
மாற்றுரைத்த பிள்ளையார் – திருவாரூர்
முக்குறுணிப் பிள்ளையார் – சிதம்பரம், மதுரை
வரசித்தி விநாயகர் – திருவல்லம்
வலம்புரி விநாயகர் – திருக்களர்
வாதாபி கணபதி – திருப்புகலூர் (திருச்செங்காட்டங்குடி, கணபதீச்வரம்)
வீர உறத்தி விநாயகர் – திருமறைக்காடு
வெள்ளை விநாயகர் – திருவலஞ்சுழி இடும்பாவனம்
வேதப் பிள்ளையார் – திருவேதிகுடி
🌹 🌿 விநாயகரின் ரசாயன யுத்தம்🌿🌹
🌹 🌿 ரசாயனப் போர் முறை (Chemical warfare) மிகவும் சர்ச்சைக்குரிய விஷயம். ஐ.நா.சபையால் தடை செய்யப்பட்ட போர் முறை. ஆனால் எதிரிகள் முதலில் அதைப் ப்ரயோகித்தால் தற்காப்புக்காக அதைச் செய்வதில் தவறில்லை. இதைத் தான நாம் கும்பிடும் பிள்ளையாரும் செய்தார்.
🌹 🌿 விநாயகரின் 16 முக்கிய நாமாக்களில் ஒன்று தூமகேது. இந்த சம்ஸ்கிருதச் சொல்லுக்கு இரண்டு அர்த்தம் உண்டு: 1.வால் நட்சத்திரம், 2.விநாயகப் பெருமான். அவருக்கும் வால் நட்சத்திரத்துக்கும் (தூமகேது) ஒரு தொடர்பும் இல்லை.
🌹 🌿 விகுதி என்ற ஒரு அரசன் இந்திர பதவி மீது ஆசை கொண்டான். அதைப் பொறுக்காதோர் அவனைச் சபிக்கவே அவன் தூமாசுரன் என்ற புகை அசுரனாகப் பிறந்தான். தூமம் என்றால் புகை என்று பொருள். அவனிடம் விஷப் புகை ( Weapons of Mass Destruction) ஆயுதங்கள் இருந்தன. அதை அவன் ரிஷிகள் மீதும் நல்லோர் மீதும் பிரயோகித்தான். அவனைக் கொல்ல சுமுதை என்பவளுக்குப் பிறக்கப்போகும் குழந்தை உதவும் என்று ஒரு அசரீரி கேட்டது. ஆகவே சுமுதை கணவருடன் காட்டுக்குச் செல்ல, அங்கு விநாயகரே அவர்களுக்குக் குழந்தையாக வந்து அவரிடம் வளர்ந்தார்.
🌹 🌿 தூமாசுரன் செயல்களைக் கேள்வி கேட்கவே அவன் பிள்ளையார் மீதும் புகை ஆயுதங்களைப் பிரயோகித்தான். அவரோவெனில் அத்தனை புகையையும் உள்ளுக்கு இழுத்தார். தூமாசுரன் மீது அந்த விஷப் புகையைக் கக்கவே அவன் சேனைகளுடன் அழிந்தான். ஆகவே அவருக்கு தூம கேது என்று பெயர்.
No comments:
Post a Comment