நாதவடிவானவனே......
பல்லவி
நாதவடிவானவனே நமச்சிவாயனே
பாதம் பணிந்தேன் எனையாண்டருள்வாய்
அனுபல்லவி
வேதப் பொருளே சோதியே சுடரே
ஆதியும் அந்தமும் அனைத்தும் நீயே
சரணம்
கீதங்களில் வரும் சரிகம பதநி
எனும் சப்த ஸ்வரங்களின் உள்ளிருப்பவனே
மாதவன் கேசவன் நேசிக்குமீசனே
பூதகணங்களும் நந்தியும் போற்றும்
No comments:
Post a Comment