திருவுடையம்மனின்......
பல்லவி
திருவுடையம்மனின் திருப்பாதம் பணிந்தேன்
அருந்திய நஞ்சை அமுதாகச் செய்த
அனுபல்லவி
திருமணங்கீஸ்வரர் மனங்கவர் நாயகி
திருமால் கேசவனின் அன்பு சோதரி
சரணம்
தருமநெறி காக்க தரணியிலவதரித்த
அருமறைகள் போற்றும் ஆதி பராசக்தி
இருவினைப் பயன்களால் படுந்துயர் நீங்கவும்
வருமிடர் களைந்தெனைக் காத்தருள வேண்டியும்
No comments:
Post a Comment