Saturday, 1 May 2021

நிலாப் பெண்

 

                    நிலாப் பெண்          

               

வான வீதியில் உலாப் போகும் நிலாப்பெண்ணே

கண்டநாள் முதல் காதல் கொண்டேன் உந்தன் மேலே

நீல வானில் மீனைப் போலவே நீந்திச்செல்லும்

கோலமிகு வெண்ணிலவு பெண்ணணங்கே

ஆலிலை துயிலும் கண்ணன் கேசவன் விரும்பும்

நூலிடை ராதை போலுனை நான் நேசித்தேன்


சீதக் கிரணம் கொண்டு  ஆதரவு தந்து நீ

காதல் தேவதையாய் கவிகளுக்குக் காட்சி தந்தாய்

பூவுலகில் நானென்றுமங்குமிங்கும்

போகுமிடமெலாம் கூடவே வந்தாய் நீ

மூவுலகிலும் எங்கு சென்றாலுமென்னோடு

நீ வர வேண்டுமென ஆசை கொண்டேன்


இரவில் தோன்றி பகலில் மறைந்து நீ

வண்ணக்கனவு தந்து மனம் குளிரச்செய்தாய்

விண்ணில் திரிந்தாலும் மண்ணில் கவிவாணர்

கண்ணில் அழகுக் கவிபாடும் காட்சிப் பொருளானாய்

கண்ணிறைந்த பேதையே காம்பேர்தோட் பெண்ணே

வெண்ணிலவே உன்னை நான் கூடும் நாளென்னாளோ

 





 


 

No comments:

Post a Comment