சங்கர சேகர....
பல்லவி
சங்கர சேகர சதாசிவா
கங்காதரனே காத்தருள்வாய்
அனுபல்லவி
பங்கய நாபன் கேசவன் நேசனே
பொங்கரவணிந்த நமச்சிவாயனே
சரணம்
சங்கரி பங்கிலுறை பரமேச்வரனே
அங்கமில் காமனை கண்ணழலாலெரித்தவனே
திங்கள் பிறையணிந்த இந்துசூடனே
எங்கும் நிறைந்திருக்கும் அகிலாண்டேச்வரனே
சிங்காரவேலனிடம் ஓங்கரப் பொருள் கற்ற
மங்கல மூர்த்தியே மகாதேவனே
ஐங்கரன் தந்தையே ஆதியே சோதியே
மங்காத புகழ் மேவும் பெருந்துறை சிவனே
No comments:
Post a Comment