கல்யாணராமனை....
பல்லவி
கல்யாணராமனை மனமாரத்துதித்தேன்
வில் வளைத்தொடித்து சீதையை மணந்த
அனுபல்லவி
பொல்லாத அரக்கரை போரிட்டழித்த
வல்வில் ராமனை வடிவான கேசவனை
சரணம்
கல்லைக் காரிகையாய் செய்த ராகவனை
புல்லை ஆயுதமாய் எறிந்த வல்லவனை
சொல்லும் செயலும் ஒன்றாகச்செய்பவனை
அல்லலிடர் நீக்கும் கோதண்டராமனை
தந்தை சொல் காக்க கானகம் சென்றவனை
சந்திரனைப் பழிக்கும் அழகுமுகமுடையவனை
நரர் சுரரிந்திரன் நாரதர் நான்முகன்
அனைவரும் போற்றும் அயோத்தி மன்னனை
No comments:
Post a Comment