அத்புத விக்ரஹ அமராதீச்வர அகணித குணகண அம்ருதசிவஸாம்பசதாசிவ ஸாம்பசதாசிவ ஸாம்பசதாசிவ ஸாம்பசிவஆனந்தாம்ருத ஆச்ரிதரக்ஷக ஆத்மானந்த மஹேசசிவஇந்துகலாதர இந்த்ராதிப்ரிய ஸுந்தரரூப ஸுரேச சிவ:பரமேச்வர மாத்ருகாவர்ணமாலா ஸ்தோத்ரம்பலரும் வியந்து பாராட்டும் அற்புதமான சரீரத்தைக் கொண்டவரே, தேவர்களுக்கெல்லாம் தலைவரே, மகேஸ்வரா, நமஸ்காரம். கணக்கற்ற நல்ல குணங்களுக்கு இருப்பிடமானவரே, மரணத்துக்கு மரணம் தந்தவரே, சிவபெருமானே, நமஸ்காரம். அம்பிகையுடன் கூடிய சதாசி வனே, ஆனந்த வடிவாய்த் திகழ்பவரே, அம்ருதம் போன்றவரே, அண்டிய பக்தர்களைக் காப்பவரே, ஆத்மானந்தத்தில் திளைப்பவரே, மகேஸ்வரா, நமஸ்காரம். சந்திரகலையைத் தரித்தவரே, இந்திராதி தேவர்களிடத்தில் அன்பு கொண்டவரே, அழகே உருவானவரே, தேவர்களுக்கு ஈசனே, சிவபெரு மானே, நமஸ்காரம்.
சாம்பசதாசிவனை
No comments:
Post a Comment