கடவூரில்.......
பல்லவி
கடவூரில் நின்றருளும் அன்னையே அபிராமி
அடி பணிந்திடுமென்னை ஆண்டருள்வாயே ( திருக்)
அனுபல்லவி
படமெடுத்த பாம்பணிந்த அமிர்தகடேச்வரர்
உடனிருந்து காட்சி தரும் கேசவன் சோதரி
சரணம்
அடலேறு மீதமர்ந்த காலகாலனின்
இடம் கொண்ட நாயகியே உமையே கௌரி
குடம் போன்ற கொங்கைதனைக் கொண்டு
விடமுண்ட கண்டன் மனம் கவர்ந்த நாயகியே
No comments:
Post a Comment