ஸ்ரீகாமேஸ்வர பீட மத்ய நிலயாம்
ஸ்ரீ ராஜராஜேஸ்வரீம்
ஸ்ரீ வாணீ பரிஸேவிதாங்க்ரியுகளாம்
ஸ்ரீமத்க்ருபாஸாகராம்
சோகாபத்ய மோசினீம் ஸுகவிதா
நந்தைக ஸந்தாயினீம்
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் ஸிவாம்
ஸ்ரீகாமகோடி பீடத்தின் நடுவில் அமர்ந்தவளே, ராஜராஜாக்கள், ஈஸ்வரி, மகாலட்சுமி, சரஸ்வதி இவர்களால் சேவிக்கப்பட்ட, தாமரை போன்ற மென்பாதங்களைக் கொண்டவளே, ஐஸ்வர்யத்தை அளிக்கும் கருணைக் கடலாக இருப்பவளே, மனக்கவலை, ஆபத்துகள், பயம் ஆகியவற்றைப் போக்குகிறவளே, நல்ல கவிதை உள்ளத்தை அளித்து, அதனால் பேரானந்தத்துக்கு வழி வகுப்பவளே, கமலாம்பிகையே, நமஸ்காரம்.
காமகோடி.....
பல்லவி
காமகோடி பீடம் நடுவிலமர்
கமலாம்பிகையை அனுதினம் துதித்தேன்
அனுபல்லவி
நாமகள் திருமகள் மலைமகள் பணியும்
தாமரைப் பதம் கொண்ட கேசவன் சோதரியை
சரணம்
பூமியில் கவலை அபாய பயம் நீக்கி
தேமதுரக் கவி பாடும் ஆற்றல் தந்து
பாமரன் எனக்கு ஆனந்தமளித்திடும்
மாமறை போற்றும் ராஜராஜேச்வரியை
No comments:
Post a Comment