ஜுரஹரேச்வரனை......
பல்லவி
ஜுரஹரேச்வரனே அகில லோக நாயகனே
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
தரணியிலனைவரும் பிணியால் படுந்துயர்
விரைவில் நீங்கிட உன்னருள் வேண்டியே
சரணம்
அருணாசலனே அடியார்க்கிரங்கி
ஒருநாள் பிட்டுக்கு மண் சுமந்தவனே
திருநாளைப் போவார் தரிசனம் பெறவே
எருதுதனைச் சற்றே விலகிடச் செய்தவனே
தருமிக்குப் பாட்டெழிதி பொற்கிழியளித்தவனே
இருவினைப் பயன் தொலைய அனைவரும் வணங்கும்
கருணாகரனே கேசவன் நேசனே
வருமிடர் துன்பங்களனைத்தும் நீங்கிட
No comments:
Post a Comment