நமஸ்கார மஹாமாயே,
ஜகந்மாதே பராத்பரே ||
ஸங்க சக்ர கதா ஹஸ்தே,
லக்ஷ்மீமாதே நமோ ஸ்துதே ||
உயர்ந்தது அனைத்திலும் உயர்ந்தவளாம் உலகுக்கெல்லாம் தாய் அவளாம்
அன்புக்கரங்களில் சக்கரம், கதையும் அழகுச் சங்கும் தாங்கியவளாம்
மாயா சக்தியை தோற்றுவிக்கும் மஹாமாயை அவளாவாள்
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியை வணங்குகின்றேன்.
உலகனைத்திற்கும்......
பல்லவி
உலகனைத்திற்கும் தாயானவளே
மகா மாயே மகாலக்ஷ்மி
அனுபல்லவி
நலமனைத்துமருளும் கேசவன் துணைவியே
அலைமகளுனையே அனுதினம் துதித்தேன்
சரணம்
திருக்கரத்தில் சங்கும் சக்கரமும் கதையும்
விருப்பமுடனேந்தி அருள்மழை பொழிபவளே
தருமநெறி காத்து தரணியை ஆண்டருளும்
திருமகளே உந்தன் மலரடி சரணம்
No comments:
Post a Comment