ஒரு தரம்....
பல்லவி
ஒருதரம் சொன்னாலும் போதாதோ ராமா
திரும்பத்திரும்ப முறையிட வேண்டுமா
அனுபல்லவி
தருமம் அறிந்தவன் நீ சாத்திரம் தெரிந்தவன் நீ
கருணைக் கடலே கேசவனே ரகுராமா
சரணம்
குரு நாரதர் துதிக்கும் திருமால் நீ
பெருமைக்குரிய அயோத்தி மன்னன் நீ
திருமகளை மணந்த சீதாராமன் நீ
அருமறைகள் ஓதும் முனிவர்கள் துதிப்பவன் நீ
அரியாசனம் அமர்ந்த பட்டாபி ராமனே
சரிநிகர் சமானம் இல்லாத தேவனே
கரிக்கும் காரிகைக்கும் அருள் புரிந்தவனே
பரிபூரணனே அனைத்திலும் சிறந்தவனே
அரக்கன் ராவணனை வதைத்த ராகவனே
அரனுக்குகந்தோனே சந்திரமுகத்தோனே
பரசுராமனின் கர்வம் தீர்த்தவனே
பரம்பொருளே விரைந்து ஆட்கொள்ள வேண்டுமென
No comments:
Post a Comment