அவதாரம் ஏதுக்கய்யா....
பல்லவி
அவதாரம் ஏதுக்கய்யா ராமய்யா
குவலயம் கொண்டாடும் அயோத்தி மன்னனாய்
அனுபல்லவி
தவம் செய்யும் முனிவர்களின் தரிசனம் பெறவோ
புவனம் காத்திடவோ கேசவா ரகுராமா
சரணம்
பவசாகரத்தில் விழுந்த பக்தரை காப்பதற்கோ
அவனியில் தருமம் நிலைபெறச் செய்வதற்கோ
சிவதனுசை முறித்து சீதையை மணப்பதற்கோ
புவியிலுன் புகழ் பாடும் எனக்கருள் செய்யவோ
No comments:
Post a Comment