உன்னுள்ள.....
பல்லவி
உன்னுள்ளத் தாமரையில் இடம் பெறவே நான்
இன்னும் என்ன செய்ய வேண்டும் ஶ்ரீரகுராமா
அனுபல்லவி
உன் நாமமே துதித்தேன் உனையே நினத்திருந்தேன்
உனது திருவடியே சதமென பூஜித்தேன்
சரணம்
உன்னை ஒருமுறையழைத்த கரிக்கபயம் தந்தாய்
இன்னும் வழியில் வந்த காரிகையின் சாபம் தீர்தாய்
கன்னலே கேசவனே பாஞ்சாலியின் குறை தீர்தாய்
புன்னகை முகத்தோனே சூரியகுலத்தோனே
முன்னமொரு படகோட்டி குகனை சோதரனென்றாய்
அன்று குரங்கரசன் சுக்ரீவனைத் தோழனென்றாய்
அரக்கன் வீடணனை அரியணையேற்றினாய்
இன்னுயிரே ராகவனே கோசலைப் புதல்வனே
No comments:
Post a Comment