தாமரை.......
பல்லவி
தாமரைத் திருவடியே சரணம் ராமா
மாமறைகள் போற்றும் கேசவா உன்
அனுபல்லவி
காமனைப் பழிக்கும் அழகனே
பூமியின் புதல்வியை மணந்த ரகுவரனே
சரணம்
நாமங்களாயிரம் உடைய நாராயணனே
தாமரை நாபனே தயரதன் மைந்தனே
பாமரர் பண்டிதர் முனிவர்கள் ஞானியர்
பூமண்டலத்தோரனைவரும் பணிந்திடும் ...(தாமரை..)
சோமசுந்தரரும் மீனாக்ஷியும் துதித்திடும்
ஆமருவியப்பனே அயோத்தி மன்னனே
தாமோதரனே தருமநெறி நின்றவனே
சேமமுற அனைவரையும் காத்தருள் புரிபவனே (தாமரை..)
No comments:
Post a Comment