புகலிடம்.....
பல்லவி
புகலிடம் வேறில்லை ஶ்ரீ ரகுராமா
அகம் புறம் துலக்கி உனையே துதித்தேன்
துரிதம்
மகபதி ரதிபதி சரச்வதியின்பதி
பசுபதி பணிந்திடும் சீதாபதியே
அனுபல்லவி
குகனுக்கருளியதுபோலெனக்கருள்வாய்
சகலலோக நாயகனே கேசவா
சரணம்
சகதேவனையும் யசோதையும் போல
உன்னைக் கட்டிட என்னால் முடியவில்லை
இகபர சுகங்களை களைந்திடச்செய்து
முகமலர் காண்பித்து அபயமளித்திடுவாய்
No comments:
Post a Comment