நம்பியுன்....
பல்லவி
நம்பியுன் பதம் பணிந்தேன் அம்புஜலோசனனே
எம்பெருமான் நீ என்னை ஆட்கொள்வதெப்போது
துரிதம்
தும்புருநாரதர் சுகசனகாதியர்
உம்பரும் முனிவரும் அனுமனும் கருடனும்
வானரர் மானுடர் தானவரனைவரும்
கரம் பணிந்தேத்தும் கோதண்டராமனே
அனுபல்லவி
தம்பியும் ஜானகியும் அனுமனும் உடனிருக்கும்
அம்புலிமுகத்தோனே அழகிய ரகுவரனே
சரணம்
தெம்புடனிருந்த சிறுவயதில் அந்நாளில்
வம்பு வழக்கென்றும் வீடுமனை மக்களென்றும்
ஜம்பமாய்த்திரிந்தேன் மனம் வருந்தி இன்று
அம்புயநாபனே கேசவா ஶ்ரீராமா
No comments:
Post a Comment