குன்றக்குடியமர்ந்த....
பல்லவி
குன்றக்குடியமர்ந்த சண்முகப்பெருமானே
உன்றன் பொற்பாதமே என்றன் துணை
துரிதம்
பானுவும் திங்களும் கார்த்திகைப் பெண்டிரும்
பாண்டவர் கௌசிகன் இந்திரன் போற்றும்
அனுபல்லவி
அன்று குறமகள் வள்ளியை மணந்தவனே
வென்று பகை முடித்து சூரனை அழித்தவனே
சரணம்
நன்றல்லது தீதொன்றும் நான் செய்திலேன்
என்றும் உனதருள் ஒன்றையே வேண்டினேன்
தொன்று தொட்டு இன்றுவரை அனைவரும் துதித்திடும்
கந்தபெருமானே கேசவன் மருகனே
No comments:
Post a Comment