உன்னைவிட....
பல்லவி
உன்னைவிட சிறந்த தெய்வம் உலகில் வேறில்லை
என்னரசே ஶ்ரீராமா எனைக் காத்தருள்வாய்
அனுபல்லவி
பன்னகசயனனும் நீ பாற்கடல்வாசனும் நீ
புன்னகை முகத்தோனே கன்னலே ராகவனே
சரணம்
இன்னமுதே ரகுராமா சூரிய குலத்தேனே
உன்னருள் மட்டுமே உலகில் வேண்டினேன்
தன்னலம் பொன்னாசை கொண்டலையும் மாந்தருடன்
என்னை சேர்த்திடாமல் நல்வழி நடத்திடுவாய்
அன்னை தந்தை குருவென்று உன்னையே நினைத்தேன்
நன்னெறி காட்டி என்னை நலம் பெறச் செய்திடுவாய்
பன்னகபூஷணனின் நேசனே கேசவனே
தென்னிலங்கை மன்னன் ராவணனை வென்றவனே
உன்னைச் சரணடைந்தோர் நலம் காக்கும் உத்தமனே
மன்மதனை மிஞ்சும் பேரழகுடையவனே
அன்னை ஜானகியின் மனங்கவர்ந்த ரகுவரனே
மன்னு புகழ் அயோத்தியின் மன்னவனே குலதனமே
No comments:
Post a Comment