நீயில்லாத.....
பல்லவி
நீயில்லாத இடமில்லை கோசலராமா
தாயில்லா மகவில்லை தாரிணியில் கேசவனே
அனுபல்லவி
காயில்லாமல் கனியில்லை மரங்களிலே
தீயில்லாமல் புகையுமில்லை புவியில்
சரணம்
மாயையினால் மதிமயங்கி இவ்வுலகிலன்று
தீய செயல்கள் புரிந்து வீணே திரிந்தேன்
மாயவனே மனம் திருந்தி உனதருளாலின்று
வாயார உனைப் பாடி மனமாரத்துதித்தேன்
ஆயர்குலத்துதித்து கோவர்த்தனமேந்தி
வேய்ங்குழலூதி லீலைகள் புரிந்தாய்
மாயமான் தேடி அரக்கர் குலமழித்தவனே
தூயவனே துயர் துடைத்து என்னைக்காத்ருள்வாய்
No comments:
Post a Comment